தாய் இரு மகள்களுடன் விஷமருந்தி தற்கொலை : விழுப்புரம் அருகே சோகம்!!

23 September 2020, 10:51 am
Villupuram Suicide- updatenews360
Quick Share

விழுப்புரம் : தாய் தனது இரண்டு மகள்களுடன் விஷமருந்தி தற்கொலை செய்த நிலையில் தாய் மற்றும் மூத்த மகள் உயிரிழந்தனர்.

விழுப்புரம் சித்தேரிகரை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன், இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், பவித்ரா மற்றும் ஷர்மி ஆகிய மகளும் உள்ளனர். இதில் பவித்ரா 12ஆம் வகுப்பும், ஷர்மி 7ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கஜேந்திரனுக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று கஜேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்தவர்கள் காணவில்லை. இதையடுத்து எல்லா இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

இதனைதொடர்ந்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து விட்டு தேட தொடங்கினார். இந்நிலையில் காலை வீட்டின் பின் பக்கம் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் தாய் கவிதா, மகள் பவித்ரா ஆகியோர் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

மற்றொரு பெண் ஷர்மி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கஜேந்திரன் கடன் வைத்திருக்கும் நிலையில் புது வண்டி வாங்கியதாலும், மனைவிக்கு உடல் நலம் சரி இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வில்லை என்றும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 9

0

0