‘எம்புள்ள எங்கூட இல்லனாலும்…உயிரோட இருக்கட்டும்’: மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் அளித்த பாசத் தாய்..!!

Author: Rajesh
18 April 2022, 1:41 pm
Quick Share

கோவை: வால்பாறையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த தாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகன் ஹரிஹரன் (23). இவர் வால்பாறையில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் ஹரிஹரன் 16ம் தேதி பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், முன்னால் சென்ற வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ஹரிஹரனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அவரது தாயார் பழனியம்மாள், ஹரிஹரனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தார்.

மூளைச்சாவு அடைந்த இளைஞர், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சிலருக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 578

0

0