லாரிக்கும், காருக்கும் இடையே சிக்கிய மோட்டார் சைக்கிள்: நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி…!!

7 November 2020, 12:56 pm
Quick Share

சிவகங்கை: லாரிக்கும், காருக்கும் இடையே மோட்டார் சைக்கிள் சிக்கிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சிவகங்கை நகரில் பாஜகவினர் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியில் செல்லும் வாகனங்களை ஒரே பாதையில் சென்று வர போலீசார் அனுமதித்தனர்.

அப்போது, சாலையோரமாக கார் ஒன்று நின்றிருந்தது. இந்நிலையில், தேவகோட்டையை சேர்ந்த தொழிலாளியான சூசை என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை முந்தி செல்ல முயன்ற லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் காருக்குள்ளும், பின் சக்கரம் லாரிக்குள்ளும் மாட்டி கொண்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் சூசை எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை அகற்ற முடியவில்லை. இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார், மற்றும் பொதுமக்கள் காரை கைகளால் தூக்கி சற்று தள்ளிவைத்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளை அப்பறபடுத்தி போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

Views: - 17

0

0