தொடர் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்: ரெண்டு பக்கமும் பள்ளம் இருந்தா எப்படி?…அரசின் மீது அதிருப்தியில் மக்கள்..!!

Author: Rajesh
1 April 2022, 11:14 am
Quick Share

கோவை: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாளையம் சாலையில் இருபுறமும் உள்ள பள்ளத்தால் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறுகிறது. திட்டமிடப்படாத மாற்றுச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாற்றுச்சாலைகளில் மக்கள் பயனித்து வருகின்றனர்.

இதில் முக்கிய மாற்றுச்சாலையாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து கஸ்தூரி பாளையம் சாலை வழியாக வீரபாண்டி பிரிவு செல்லும் சாலை உள்ளது. இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரி பாளையம் செல்லும் வழியில் உள்ள குறுகிய சாலையில் இருபுறமும் பள்ளம் உள்ளது.

இதனால் இரண்டு வாகனங்கள் எதிர் எதிர் வரும் போது பள்ளம் உள்ளது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் என்னில் அடங்கா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். மாற்றுச்சாலைகளை மேம்படுத்த வேண்டும். குறுகிய சாலையில் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்புகள் வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 370

0

0