அதானி துறைமுக விரிவாக்கம்: மீனவர்களின் பாரம்பரியம் காப்பது கடமை: வாக்குறுதி தந்த எம். பி…!!
Author: Sudha16 ஆகஸ்ட் 2024, 11:14 காலை
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பாக அழைப்பாளராக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
பழவேற்காடு காட்டுபள்ளியில் அதானி துறைமுக விரிவாக்க பணிகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாரம்பரியம் அழியாமல் காப்பது என் கடமை என்றும். அதை நிச்சயம் செய்வேன் எனவும் அவர் உறுதியளித்தார்.
Views: - 124
0
0