இன்று தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா மாவட்டம் தோறும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி துவக்கப்பட்டு முகாம் நடைபெற்றது.
முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், புரோட்டாகால்படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதோடு மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை திட்டினார்.
தொடர்ந்து கோபத்தில் அமர்ந்திருந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது நான்தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கியதோடு தன்னை முட்டாள் என்று திட்டுவதாக கூறி தங்க தமிழ்செல்வனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பதிலுக்கு தங்க தமிழ்செல்வமும் கடும் வாக்குவாதம் செய்ய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே துவக்க விழா முடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர் முகாம் மட்டும் நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.