எம்.பி வசந்த குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது..!

11 August 2020, 11:55 am
Quick Share

வசந்த்&கோ நிறுவனரும், எம்.பியுமான வசந்த குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், சென்னையில் அதன் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த சூழலில், சமீப காலமாக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலருக்கு கொரோனா தொற்று நோய் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, வசந்த்&கோ நிறுவனரும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த குமாருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மக்கள் மல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு, நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.