உண்மைக்காதல் ஒரு போதும் அழிவதில்லை என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது ஒரு நிகழ்வு.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைமுத்து (75). சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா காலகட்டத்தின் போது மே மாதம் 15 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு விஜயா உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
மனைவி மீது அதீத பிரியம் வைத்திருந்த கோட்டைமுத்து, அவர் நினைவில் இருந்து மீள முடியாமல் இருந்து வந்துள்ளார்.தன் மனைவியின் அஸ்தியை எடுத்து வந்து திருவாடானை அருகே அவரது சொந்த ஊரான ஆதியூரில் ₹1 கோடி செலவில் அழகிய மணிமண்டபம் கட்டி உள்ளார்.
அங்கு மனைவிக்கு ₹7 லட்சத்து 50 ஆயிரத்தில் வெண்கலச் சிலை அமைத்துள்ளார். அந்த மணி மண்டபத்தின் உள்ளே கணவன், மனைவி கலந்து கொண்ட விசேஷங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அலங்கரித்துள்ளார்.
நேற்று இந்த மணி மண்டபம் திறக்கப்பட்டது. இதில் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள 18 பட்டி மக்களையும் அழைத்து அவர்களுக்கு அறுசுவை விருந்தும் வைத்து கூடவே அனைவருக்கும் வேட்டி சேலை தாம்பூல தட்டையும் அன்பளிப்பாக தந்து நெகிழச் செய்துள்ளார்.
கோட்டைமுத்து கூறுகையில், ‘‘எனது மனைவி விஜயா, குடும்பத்திற்காக உழைத்து அன்பையும், நல்ல பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரின் நினைவாக இந்த மணிமண்டபத்தை கட்டி உள்ளேன்’’ என்றார்.தாஜ்மகால் போலவே தன் மனைவிக்காக கணவனால் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் இது என ஊரார் புகழ்ந்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.