திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் : ஆனால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!!!!

Author: kavin kumar
13 February 2022, 5:48 pm
Quick Share

கரூர் : தேர்தலுக்காக திமுகவினர் ஓட்டுக்கு பணம் தர உள்ளதாகவும், அதை பொதுமக்கள் வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று காந்தி கிராமம் தொழிற்பேட்டை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசியபோது, “கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழை சட்டசபைக்கும் தேர்தல் வர உள்ளது. எனவே இன்னும் 27 அமாவாசை மட்டுமே திமுக ஆட்சி இருக்கும். அதற்கு பிறகு திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

வெறும் 3 சதவீத வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என்றார். இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் அதிமுக 200 இடங்களில் வெற்றிபெறும். பொய் சொல்லியே திமுக ஆட்சியைப் பிடித்தது” என்றார். மேலும் அவர் பேசுகையில், ’’ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க திமுகவினர் தயாராக இருக்கிறார்கள், பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’’ என்று கூறி வாக்கு சேகரித்தார்.

Views: - 425

0

0