முரசொலி மூல பத்திரத்தை காண்பித்தால் ரூ. 5 லட்சம் பரிசு : கோவையில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்கள்..!!!

16 November 2020, 6:11 pm
murasoli - updatenews360
Quick Share

கோவை : பஞ்சமி நிலத்தை அபகரித்ததாக முரசொலி மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதன் மூல பத்திர நகலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு போஸ்டர்கள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான முரசொலி நிறுவனம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பாஜக சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர் முரசொலி மூல பத்திர விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முரசொலியின் மூல பத்திரத்தை பத்திர நகலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, இறப்பா… பிறப்பா.. என திமுக தலைவர் முக ஸ்டாலினை விமர்சித்து பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போது, தைரியமிருந்தால் போஸ்டர்களை பெயருடன் ஒட்டிப் பாருங்கள் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில், ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 30

0

0