இதற்கெல்லாமா கொலை பண்ணுவாங்க? – வளர்ப்பு நாயை திட்டியதால் வந்த வினை…!!!

Author: Aarthi
6 October 2020, 11:43 am
Crime_updateNews360
Quick Share

திருச்செந்தூர்: வளர்ப்பு நாயை திட்டியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்தவர் பால் லிங்கம். இவரது வளர்ப்புயை நாயை அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் ‘நாயே’ என்றும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டி விரட்டியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக லிங்கராஜுவுடன் பால் லிங்கம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 3 வருடங்கள் ஆன நிலையிலும், விரோதத்துடன் இருந்துள்ளார் லிங்கராஜ். இந்நிலையில் பால் லிங்கத்தை சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார் லிங்கராஜ். இதில் பலத்த காயமடைந்த பால்லிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பால் லிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லிங்கராஜை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வளர்ப்பு நாயை திட்டியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 40

0

0