இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை : கோவையில் பயங்கரம்!!
13 September 2020, 5:46 pmகோவை : இந்து முன்னணி பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராம் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரனின் மகன் பிஜு (வயது 36), என்பவர் சோடா கடை நடத்தி வருகிறார். இவர் இந்து முன்னணி அமைப்பில் இருக்கின்றார்.இன்று மதியம் காந்திபுரம் பகுதியில் உள்ள செந்தில்குமரன் தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்துள்ளார் .
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிஜுவை சரமாரியாக வெட்டியுள்ளனர் .பின்னர் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின் உயிருக்கு போராடிய பிஜீ யை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதித்த உடனே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் முக்குலத்தோர் படையை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் முன் பகை காரணமாக வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து ஆறுமுகத்தின் நண்பர்கள் உட்பட 7பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0