மனைவியுடன் உல்லாசமாய் இருந்த அண்டை வீட்டுக்காரர்.. கண்கூடாய் பார்த்த கணவன் : குரல்வளையை அறுத்த 6 பேருக்கு ஆயுள்..!!

17 July 2021, 1:14 pm
Murder Judgement - Updatenews360
Quick Share

திருப்பூர் : மனைவியுடன் தகாத தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்த வழக்கில் பெண் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தென்னம்பாளையம் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் குடியிருக்கும் வீட்டுக்கு அருகே மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் மாணிக்கத்தின் மனைவிக்கும் முருகேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு முருகேசன் வீட்டில் இருந்தபோது மாணிக்கம் அவரது உறவினரான சத்யராஜ், நண்பர்களான ரகுவரன், சுரேஷ், மாணிக்கத்தின் தந்தை பிச்சை, தாயார் இந்திராணி ஆகியோர் அரிவாள், கத்தி, மரக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் வீடு புகுந்து முருகேசனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் மாணிக்கம், சத்யராஜ், ரகுவரன், சுரேஷ், பிச்சை, இந்திராணி ஆகிய 6 பேர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ. ஆயிரம் அபராதம், வீடு புகுந்து தாக்கிய குற்றத்திற்காக 1 வருடக் கடுங்காவல் தண்டனை, ரூ. 1000 அபராதம், கொடிய ஆயுதங்களை பயன்படுத்திய குற்றத்திற்காக 1 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை இவை அனைத்தையும் மாணிக்கம், சத்யராஜ், ரகுவரன், சுரேஷ், பிச்சை, இந்திராணி ஆகியோர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

Views: - 431

0

0