கொரோனா வார்டில் இசை மழை! மருத்துவமனையையே மகிழ்வித்த ‘திருமூர்த்தி‘!!
30 September 2020, 6:48 pmகிருஷ்ணகிரி : கொரோனா தனிமைபடுத்தப்பட்ட வார்டில் தன் இனிமையான குரலால் பாடி நோயாளிகளை பார்வையற்ற மாற்று திறனாளி திருமூர்த்தி மகிழ்விக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படித்தில் வரும் “கண்ணான கண்ணே” பாடலை, அதே குரல் வளத்துடன் பாடியதால் பிரபலமானவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி திருமூர்த்தி. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிபட்டி கிராமத்தை சேர்ந்த கண்பார்வையற்ற மாற்று திறனாளி இளைஞர் திருமூர்த்தி. பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர்,.
நல்ல குரல் வளம் கொண்டவரான இவரின் குரல் வளத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த இசையமைப்பாளர் இமான், தனது இசையில் பாட வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பர்கூரில் உள்ள கொரோனா தனிமைபடுத்தப்பட்ட வார்டில் திருமூர்த்தி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் மனு அழுத்தம் நீங்க, திருமூர்த்தி இசை வாசித்து பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.
பிறவியிலேயே கண் பார்வை இல்லை என்றாலும், நல்ல குரல் வளம் உள்ளதால், அனைவரின் மனதின் குரலாக உள்ளார். மற்றவர்களின் மனஅழுத்தத்தை போக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை உணர்ந்த திருமூர்த்தி, கொரோனாவால் அடைந்து கிடப்பவர்களுக்கு உத்வேகம் அளித்து வருவது மிகவும் பாராட்டு கூடிய விஷயமாக உள்ளது.