முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட தாயை பிரிந்த குட்டி யானை ; ஆஸ்கர் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் ஒப்படைப்பு

Author: Babu Lakshmanan
17 March 2023, 6:44 pm
Quick Share

முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட புதிய வரவான தருமபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை மீண்டும் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.

கடந்த ஏழாம் தேதி தர்மபுரி மாவட்டம் பென்னகரம் பகுதியில் வழி தவறி வந்து கிணற்றில் விழுந்த நான்கு மாத ஆண் குட்டி யானையை வனத்துறையினர் தீயணைப்பு துறை உதவியுடன் மீட்டனர். பின்பு, தர்மபுரி ஒகேனக்கல், ஒட்டப்பட்டி காட்டுப்பகுதியில், அதனை பராமரித்து உணவுகள் வழங்கி பாதுகாத்தனர்.

இந்நிலையில், இந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாமிற்கு டெம்போ வாகன மூலம் கொண்டுவரப்பட்டது. இந்த குட்டி யானையுடன் இதுவரை அதனை பாராமரித்து வந்த வன ஊழியர் மகேந்திரன் மற்றும் மற்றும் மருத்துவ குழுவினர் வனத்துறையினர் முதுமலைக்கு வந்தனர்.

5 நாட்கள் பராமரித்த வனஊழியர் மகேந்திரன் அதனை விட்டு பிரிவதை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்பு முதுமலையில் ஏற்கனவே ரகு, பொம்மி என்ற இரு யானைகளை பராமரித்த ஆவணப்படத்தால், ஆஸ்கர் வாங்கிய சென்ற பொம்மன் – பெள்ளி அம்மாளிடம் குட்டி யானையை முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், இணை களஇயக்குனர் மற்றும் வனத்துறையினர் ஒப்படைத்தனர். பின்பு குட்டி யானைக்கு மருத்துவகுழுவினர் பறிசோதனை செய்து சத்து உணவுகள் வழங்கினர்.

Views: - 57

0

0

Leave a Reply