எனக்கு ரொம்ப பிடித்த மாவட்டம் : கோவையின் சிறப்பு குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்!!

13 January 2021, 9:34 pm
Premalatha - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை மக்களிடையே உரையாற்றினார்.

கோவை கோவில்மேடு பகுதியில் 4100 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களிடையே உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம் மிகுந்த மரியாதை அளிக்க கூடிய மாவட்டம் என்று மகிழ்ச்சி கொண்டார். மேலும் விஜயகாந்த் முதலமைச்சராக வந்தால் விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த தை பொங்கல் அனைவருக்கும் புதிய விடியலாய் அமையட்டும் என்று கூறி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.நிகழ்வில் 1000 கணக்கான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வை கண்டுக்களித்தனர்.

Views: - 39

0

0