மற்ற நடிகர்களுடன் லிப்லாக் காட்சியில் நடிப்பதை என் கணவர் பெருமையாக நினைக்கிறார் : ரஜினி பட நடிகை ஓபன் டாக்!!(வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan9 February 2022, 5:08 pm
ஆரம்ப கால சினிமாவில் ஆபாசமான காட்சி என்பதே அரிதிலும் அரிது. தொடாமல் நடித்த காலங்கள் போய் தொட்டு நடிப்பதற்காகவே அனைத்து படங்களில் காட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் இந்த கால சினிமா அமைந்துள்ளது
ஒரு லிப்லாக் காட்சி, படுக்கையறை காட்சி இல்லாமல் எந்த படம் வெளியாவதில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே திருமணத்திற்கு பிறகும் லிப்லாக் காட்சி அசால்டடாக நடித்து வருகிறார்.
பாலிவுட் சினிமாவில் நுழைவதற்கு முன்னர் கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். பின்னர் ஓம் சாந்தி ஓம் என்ற இந்தி படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். படம் சூப்பர் டூப்பர் ஸிட் ஆனது. இதையடுத்து அவரின் பல படங்கள் இந்தியில் ப்ளாக் பஸ்டர் ஆனது.
இதனால் பாலிவுட்டின் வெற்றி கதநாயகியாகே கருதப்பட்ட தீபிகா படுகோன் முன்னணி நாயகியாக வலம்வந்தார். தமிழில் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்த தீபிகா படுகோனுக்கு சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் பெற்றார்.
உடன் நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை தீவிரமாக காதலித்து வந்தார். இந்த நட்சத்திர ஜோடி கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது பாகுபலி பிரபாசுக்கு ஜோடியாக பான் இந்தியா படமொன்றில் நடித்து வரும் தீபிகா, பாலிவுட்டில் கெஹ்ரயான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் தீபிகா மற்றும் சித்தாந்த் சதுவேதி தவிர, அனன்யா பாண்டே, தைரிய கர்வா, நசிருதீன் ஷா பல பேர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் தீபிகா – சித்தாந்த் இடையே லிப் லாக் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் திருமணத்திற்கு இப்படி அப்பட்டமாக மற்றவருடன் க்ளோசாக நடிப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது பற்றி அவரிடம் கேட்ட போது, நான் மற்ற நடிகர்களுடன் லிப் லாக் காட்சியில் நடிப்பதை ரன்வீர் பெருமையாக கருதுவதாகவும், என்னுடைய நடிப்பை பற்றி அவர் பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
இந்த பேட்டியை கேட்ட பத்திரிகையாளர்களை விட, தற்போது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியாகியுள்ளனர். சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என ரசிகர்கள் கூறி தங்கள் ஆதங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.
2
0