தம்பதிக்கு குழந்தையாக மாறிய நாய்! அன்பு கட்டளையிடும் அப்புக்குட்டி!

20 August 2020, 4:45 pm
Dog- Updatenews360
Quick Share

மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிலோமினாமேரி அலெக்ஸாண்டர் தம்பதியினர். குழந்தை இல்லாத இந்த தம்பதியினரின் வீட்டில் குட்டியாக இருந்த நாய் ஒன்று தாயை விட்டு பிரிந்து, இவர்களுடைய வீட்டிற்குள் தானாக நுழைந்தது.

அந்த நாள் முதல் நாயை குழந்தையை பார்ப்பது போன்று இவர்கள் கவனித்துக்கொண்டனர். இவர்களுடன் உணர்வில் ஒன்றிவிட்ட அந்த நாய்க்கு அப்புகுட்டி என்று பெயர் வைத்து செல்லமாக அழைத்து வருகின்றனர். கடைக்குச்சென்று பொருட்கள் வாங்கிவரச்சொன்னால், கூடையில் சீட்டு எழுதி போட்டால், கூடையை வாயில் கவ்விக்கொண்டு, கடையில் சென்று பொருட்களை வாங்கி வருகின்றது அப்புகுட்டி.

மதியப்பொழுதினில், பிலோமினாமேரியை அடம்பிடித்து, இழுத்துச்சென்று, ஐஸ்கிரீம் கடைக்கு கூப்பிட்டுச்சென்று, வெண்ணிலா ஐஸ்கிரிம் வாங்கி சாப்பிடுகின்றது. நாட்டு இனத்தை சார்ந்த நாயாக இருந்தாலும், மதிய நேரம் பிரியாணி மட்டுமே உண்கின்றது.

மாலை நேரத்தில், ஸ்கூட்டியின் முன்னே உட்கார்ந்து, ஒய்யாரமாக ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பது இதனுடைய அன்புக்கட்டளை. தன்னை வளர்ப்பவர்கள் அளிக்கும் உணவை மட்டுமே உண்ணும் அப்பு, வெளியாட்களின் உணவு எதனையும் உண்பதில்லை.

வீட்டிற்குள்ளும் வெளியாட்களை அனுமதிக்காமல், ஒரு வளர்ப்பு மகனைப்போல் உலா வரும் அப்புவை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துசெல்கின்றனர்.

Views: - 40

0

0