மகள் சாவிற்கு “காதலன்“ காரணம் : காதலனின் குடும்பத்தை வெட்டி சாய்த்த தந்தை!!

8 September 2020, 11:54 am
Myladuthurai Murder - updatenews360
Quick Share

மயிலாடுதுறை : மகளின் இறப்பிற்கு பழிதீர்க்கும் வகையில் காதலனின் குடும்பத்தை வெட்டி சாய்த்த காதலியின் தந்தை உப்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). இவரது மனைவி பூங்கோதை (வயது 47). இவர்களது மகன் கார்த்திக் என்பவர் அதே பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் ரவி என்பவரது மகள் இலக்கியாவை காதலித்துள்ளார்.

அதனை ரவி கண்டித்ததால் மனமுடைந்த இலக்கியா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இலக்கியா சாவிற்கு கார்த்திக்தான் காரணம் என அவரை பழிதீர்க்க காத்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு ரவி அவரது மகன் ஸ்ரீராம், உறவினரான சதீஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கார்த்திகை கொலை செய்ய சென்றுள்ளனர்.

அவர் இல்லாததால் மதிவாணனையும், அவரது மனைவி பூங்கோதையையும் அவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கை துண்டிக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த பூங்கோதை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதிவாணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ரவி, ஸ்ரீராம், சதீஷ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0