மகன் பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு பறந்த விக்ரம் பட நடிகை..!

Author: Vignesh
29 September 2022, 1:30 pm
Quick Share

சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகி இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கும் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை மைனா நந்தினி.

சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவி தொடரில் நடித்த இவர் மைனா வேடத்தில் நடிக்க அதுவே அவரின் பட்டப்பெயராக அமைந்தது. ஏனெனில் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் மைனா சினிமா பயணத்தை தூக்கிவிட்டது.

அதன்பிறகு அடுத்தடுத்து நிறைய தொடர்கள் நடித்துவந்த மைனா இப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

அனைவரையும் போல மைனா நந்தினியும் சொந்தமாக யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் ஏதாவது பதிவு செய்த வண்ணம் இருப்பார். தற்போது தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.

Views: - 222

0

0