தாராபுரம் அருகே ஊருக்கு புகுந்த மர்ம விலங்கு : கால்நடைகள் உயிரிழப்பு.. மக்கள் அச்சம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2021, 5:47 pm
Goat Dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே உள்ள சிராம் பாளையம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து 5க்கும மேற்பட்ட செம்மறி ஆடுகள் மற்றும் 2 நாட்டுக்கோழிகள் பலியான சம்பவம் கிராம மக்களிடம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் பகுதியில் உள்ள விராச்சிமங்கலம் அருகே சிராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லேட் கந்தசாமி மனைவி கஸ்தூரி.

இவர் சண்முகம் என்பவருடைய தோட்டத்தில் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஒரு ஆட்டு கொட்டகை அமைத்து ஐந்து செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் கஸ்தூரி நேற்று இரவு ஆடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு அருகிலுள்ள வீட்டிற்கு தூங்கச் சென்றார். அப்போது நள்ளிரவு 12: 30 மணியளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டது.

அலறியடித்துக் கொண்டு எழுந்த கஸ்தூரி மற்றும் அவரது பள்ளி படிக்கும் மகனும் கதவைத் திறந்து பார்த்த போது மர்ம விலங்கு, ஆடுகளை கடித்து ரத்தம் குடித்துக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கஸ்தூரி பயத்தில் கதவை தாளிட்டு படுத்துக்கொண்டார் பிறகு காலை 5 மணிக்கு ஆட்டுக் கொட்டகைக்கு வந்து பார்த்தபோது ஆடுகள் காயமடைந்தும் மர்ம விலங்குகளால் ஆடுகளின் கழுத்து, வயிறு, கால், பகுதிகளில் கடிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தன.

ஆடுகளின் வயிற்றுப் பகுதியில் உள்ள பாகங்கள் வெளியில் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி கஸ்தூரி தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்துவுக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுசீலாவுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு ஆட்டிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது என்பது கண்டறிய, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவலின்பேரில் வனக்காப்பாளர் நாகராஜ், வன பார்வையாளர்
மகுடபதி, ஆகி வனத்துறையினர் விரைந்து வந்து தோட்டத்துக்குள் வந்த விலங்கு எது என்பதை கண்டறிந்து அவை ஊருக்குள் வராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து விவசாயி கஸ்தூரி கூறும்போது:-

இரண்டு ஆண்டு வளர்க்கப்பட்ட ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றுவிட்டது இதனால் 50, ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆடுகளை தாக்கிய மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து குழந்தைகள் பெரியவர்களை தாக்கி விடும் என்ற என்ற அச்சம் கிராம மக்கள் இடத்தில் உள்ளது.

எனவே ஆடுகளை கடித்த மருந்து விலங்குகளை பிடிக்க வேண்டும். மேலும் இழப்பீட்டு தொகையாக 50, ஆயிரம் அரசாங்கம் வழங்க வேண்டும். என இவ்வாறு தெரிவித்தார்.

Views: - 602

0

0