தருமபுரி : அரூர் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் மர்ம மரணமடைந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தில் ஜெயக்குமார் என்கிற பிரதீப். இவருடைய மனைவி சோனியா (வயது 20). கடந்த 11 மாதத்திற்கு முன் இவர்கள் திருமணம் செய்தனர்.
தற்போது சோனியா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக் கண்ட சோனியா தனது அத்தை முத்தழகியிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பவானி – பொன்னம்மா இடையே உள்ள ரகசிய தொடர்பு வெளியே தெரிந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோனியாவுக்கு இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நேற்று தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறப்பில் சந்தேகமடைந்த பெண்ணின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த உறவினர்களிடம் விசாரனை மேற்கொண்டபோது, இந்த பெண் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், இறப்புக்கு காரணமான நபர்களை கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறியலில் ஈடுப்பட்டவரை அழைத்து செல்லும் போது காவலர் ஒரு தவறி சாலையில் விழுந்தார்.
மருத்துவமனைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வராததால் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதனிடையே மறியலால் தருமபுரி அரூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.