பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு மர்ம மரணம் : முட்புதரில் இருந்து சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan11 January 2022, 7:15 pm
விழுப்புரம் : பிறந்து சில மணி நேரம் ஆன பெண் சிசு சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தில் பழைய காலனி மாரியம்மன் கோயில் நடுத்தெரு அருகே உள்ள கோலியனூர் வாய்க்கால் பகுதியில் பிறந்த சில மணி நேரம் ஆன பெண் சிசு அப்பகுதியிலுள்ள வாய்க்கால் முட்புதரில் இருந்து இறந்த நிலையில் கிடந்தது.
இதனை அப்பகுதி மக்கள் பார்த்து உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீசார் தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்து பிறந்த சில மணி நேரம் ஆன பெண் சிசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் குபேந்திரன் புகாரின்பேரில் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்த சில மணி நேரத்தில் பெண் சிசு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0