சாத்தான்குளம் போல மற்றொரு சம்பவம் : விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவன் மர்ம மரணம்!!

17 September 2020, 6:52 pm
College Student Dead - updatenews360
Quick Share

மதுரை : பேரையூர் அருகே மலைமீது மரத்தில் தூக்கிட்டு நிலையில் வாலிபர் பிணம் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் உடலை எடுக்கவிடாமல் போராட்டம்

போலீசார் விசாரணைக்கு சென்ற வாலிபரை அடித்துக் கொலை செய்ததாக கூறி பேரையூர் அருகே வாழைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த வாலிபரின் உடலை தூக்கிச் செல்ல விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை செய்து வருகிறார்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோப்பு கிராமம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் – பாண்டியம்மாள் தம்பதியினர். அவர்களுக்கு இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் என மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மூத்த மகனான இதயக்கனி அதே ஊரைச் சேர்ந்த பாண்டி – மகேஸ்வரி தம்பதியின் மகளான புனிதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் மகேஸ்வரி, இதயக்கனி தந்தை கன்னியப்பனின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.

இந்த நிலையில் இவர்கள் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் இதயக்கனி புனிதாவை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமுற்ற புனிதாவின் குடும்பத்தினர் இதயக்கனி குடும்பத்தினர் மீது சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய கண்ணன் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் இதயக்கனியின் சகோதரர்களான சந்தோஷ்,ரமேஷ் ஆகியோரை அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு இதயக்கனி வீட்டிற்கு வந்த சார்பு ஆய்வாளர் ஜெய கண்ணன், ரமேசை விசாரணை செய்ய வேண்டும் என வீட்டில் இருந்து அழைத்துச் செல்ல வந்தார். அதற்கு ரமேஷ் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை அடித்து கீழே தள்ளி விட்டு ரமேசை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் விசாரணைக்கு சென்ற ரமேஷ் காலை வரை வீடு திரும்பவில்லை அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் உறவினர்கள் காணாமல் தேடி வந்தனர் காவல் நிலையத்தில் சென்று கேட்ட பொழுது அவர் இரவே வீட்டிற்குச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் வாழைத்தோப்பு கிராமத்தில் உள்ள பெருமாள் கூட்டம் மலைமீது மரத்தில் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக அப்பகுதிக்கு சென்ற ஒருவர் கிராம மக்களிடம் தெரிவித்தார் இதனை அடுத்து உறவினர்கள் மலைமீது இறந்து கிடந்த ரமேஷின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் ரமேஷ் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாப்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நுழைய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக உடலைக் கைப்பற்ற விடாமல் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் மாவட்ட எஸ்பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இறந்த மாணவனின் உடலைப் பார்வையிட அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி அஜித்குமாரின் நேரடி பார்வையில் ரமேஷின் உடலை கைரேகை நிபுணர்கள் சோதனையிட்டனர். அதனைத் தொடர்ந்து உடலை போலீசார் முற்பட்டபோது கிராம மக்கள் போலீசாரின் முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் ஜெயகண்ணன் மற்றும் சாப்டூர் காவல் நிலைய போலீஸார் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை இறக்க அனுமதிப்போம் என வாக்குவாதம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இறந்த ரமேஷின் உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா? என வீடியோ பதிவு செய்தனர். தொடர்ந்து ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து எஸ்.ஐ.ஜெய கண்ணன் உள்பட 4 காவலர்கள் மீது வழக்குபதிவு செய்ய மாவட்ட எஸ்பி சுஜித் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து உறவினர்கள் மறியலை கைவிட்டனர். ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். போலீசார் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவன் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்த சம்பவம் வாழைத் தோப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0