போலீசாரின் எச்சரிக்கை: பொது இடங்களில் வீசப்படும் நாட்டுத்துப்பாக்கிகள்…!!

13 October 2020, 4:30 pm
gun - updatenes360
Quick Share

திண்டுக்கல்: அனுமதியில்லாத நாட்டுத் துப்பாக்கி குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்ததால் மர்மநபர்கள் நாட்டுத்துப்பாக்கிகளை பொது இடங்களில் வீசிச் சென்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைப் பகுதியில் அனுமதியில்லாத நாட்டுத் துப்பாக்கி பயன்பாடு அதிகரித்ததையடுத்து தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்க போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து பொது இடங்களில் நாட்டுத்துப்பாக்கிகளை வீசிவிட்டு செல்வது தொடர்கிறது. சிறுமலை அடிவாரம் பகுதியில் அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கியுடன் ஒரு மாதத்திற்கு முன்பு ஒருவர் பிடிபட்டார்.

விசாரணையில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சாணார்பட்டி அருகே சிறுமலை அடிவாரம் 17 துப்பாக்கிகள் வீசப்பட்டு கிடந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். சில நாட்களுக்கு பின்னர் மேலும் 10 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து நேற்று சிறுமலை மலைப்பகுதியில் உள்ள கடமான்கோம்பை பகுதியில் நேற்று 28 அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் இரண்டு பேரல்கள் பொது இடத்தில் வீசப்பட்டு கிடந்ததை கண்டனர். இதுவரை சிறுமலை அடிவாரம் மற்றும் மலைப்பகுதிகளில் 55 அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Views: - 188

0

0