பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய மர்மநபர்கள்: இரும்பு பொருள்கள் திருடிச் சென்ற கொடுமை…செங்கல்பட்டில் பரபரப்பு..!!

Author: Rajesh
20 February 2022, 6:16 pm
Quick Share

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே இரவோடு இரவாக மர்ம நபர்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

மேலும் கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மர்மநபர்களால் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 468

0

0