அதிமுக பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள்! காவல்துறை விசாரணை!!
18 August 2020, 4:06 pmவிருதுநகர் : அதிமுக கிளைச் செயலாளர் வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு நகர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(வயது 40). இவர் இந்த பகுதி அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது காரை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்துவிட்டு சென்றார்.
இந்நிலையல் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் திடீரென தீ பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதை பார்த்த செல்வகுமார் சாத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது இச்சம்பவம் குறித்து செல்வகுமார் சாத்தூர் நகர் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.