தாராபுரம் அருகே தேவாலயத்தின் பெயர் பலகைக்கு தீ வைத்த மர்மநபர்கள் : அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2021, 2:12 pm
Minister Inspection in Church - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே சிஎஸ்ஐ எல்லிஸ் தேவாலயத்தில் உள்ள பெயர்ப் பலகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து நேரில் சென்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ளது சிஎஸ்ஐ எல்லிஸ் தேவாலயம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த தேவாலயத்தின் முன் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் பெயர்ப் பலகைக்கு தீ வைத்தனர். இச்சம்பவம் குறித்து தேவாலய நிர்வாகிகள் தாராபுரம் காவல் நிலையத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் இருந்து தாராபுரம் பகுதிக்கு வருகை தந்த தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் சிஎஸ்ஐ எல்லிஸ் தேவாலயத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

அப்போது பெயர்ப் பலகைக்கு தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

Views: - 304

0

0