காந்தி சிலையை உடைத்த மர்மநபர்கள் : குமரியில் பரபரப்பு…. புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத காவல்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan12 செப்டம்பர் 2024, 12:03 மணி
குமரி மாவட்டம் குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் செயல்பட்டு வந்த இரணியல் சர்வோதய சங்கம். அரசு கட்டுப்பாட்டில் உள்ள சங்கத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து வந்த இந்த சங்கம் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு கிடந்த நிலையில் இந்த இரணியல் சர்வோதய சங்க கட்டிட வளாகத்தில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்த காந்தி அடிகள் சிலையை இந்த மாதம் எட்டாம் தேதி உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இதை பார்த்த ஊர் மக்கள் இரணியல் சர்வோதய சங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சங்க செயலாளர் ஜெயபால் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்யவோ விசாரணை நடத்தவோ செய்யவில்லை எனத்தெரிகிறது. பொது இடங்களில் இருக்கும் சிலைகள் உடைக்கும் போதோ மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சிலைகள் மீது ஒரு துணியை கொண்டுவந்து போட்டால் கூட உடனடியாக வழக்கு பதிவு செய்து அந்த நபர்களை தேடி கண்டுபிடிக்கும் காவல்துறை தேச பிதா காந்தி அடிகள் சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என் தெரியவில்லை.
உடனடியாக இந்த தேச விரோத செயலை செய்த நபர்களை கண்டுபிடிக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து உள்ளது
0
0