தேவாலயங்களை குறிவைக்கும் டிப்டாப் ஆசாமி: உண்டியல் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி..!!

21 July 2021, 5:57 pm
Quick Share

கன்னியாகுமரி: கிறிஸ்தவ தேவாலயத்தில் பட்ட பகலில் புகுந்த டிப்டாப் ஆசாமி உண்டியல் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக பட்டபகலில் திறந்திருக்கும் தேவாலயத்தில் புகும் மர்மநபர் உண்டியல் பணத்தை திருடி கைவரிசை காட்டி சென்ற வரும் நிலையில் போலீசாரும் தனிப்படை அமைந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அழகியமண்டபம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் உண்டியலில் இருந்த பணம் திருடு போனதாக தேவாலய நிர்வாகிகள் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் அந்த தேவாலய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சியில், பட்டபகலில் சாலையில் நடந்து வரும் டிப்டாப் ஆசாமி ஒருவர் தேவாலயத்தில் நுழைவதும் தேவாலயத்திற்குள் சென்ற அந்த நபர் சாவகாசமாக நின்று தேவாலய உண்டியலை திறந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அதே நாளில் கள்ளியங்காடு பகுதியில் உள்ள மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்திலும் இதேப்போல் கைவரிசை காட்டி சென்றுள்ளார்.

ஏற்கனவே அந்த டிப்டாப் ஆசாமி ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி செல்லும் காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி ஒருவராக டிப்டாப் உடை அணிந்து வரும் மர்ம நபர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தேவாலயங்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு வரும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 165

0

0