மின்கம்பி அறுந்து விழுந்ததில் மனைவி உயிரிழப்பு : காப்பாற்றச் சென்ற கணவனும் பலியான சோகம்.. சுனாமி குடியிருப்பில் நிகழ்ந்த அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
19 October 2021, 12:50 pm
nagai death - updatenews360
Quick Share

நாகை : நாகை மாவட்டம் அந்தணப்பேட்டை அருகே உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப் பேட்டை சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனிவேல் (55). இவரது மனைவி ராஜலட்சுமி (50). இன்று காலை ராஜலெட்சுமி அவரது வீட்டின் கொள்ளை புறத்தில் காலை சமையலுக்கான வேலைகளை செய்துகொண்டிருந்தார். நண்டு கழுவிக் கொண்டு இருக்கும்போது, அவர்கள் வீட்டருகிலிருந்த உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கொள்ளை புறத்தில் விழுந்தது. ராஜலட்சுமி அருகில் அறுந்து விழுந்த ஒயரை வெளியில் தூக்கிவீச முயன்றபோது மின்சாரம் தாக்கியது.

சத்தம் கேட்டு ஓடிவந்த கணவர் பழனிவேல் மனைவியை காப்பாற்ற முயன்றபோது, அவரும் மின்சார பாதிப்பிற்குள்ளானார். இதில் கணவன், மனைவி இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி ஒரே வீட்டில் கணவன் மனைவி 2 பேரும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 105

0

0