நாகை மக்களவை தொகுதி எம்.பி. செல்வராசுக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் அனுமதி…

2 August 2020, 4:51 pm
Quick Share

நாகை: நாகை மக்களவை தொகுதி எம்.பி. செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 1748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம். செல்வராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம்.செல்வராஜ் தற்போது முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டார். அதற்கான முடிவுகள் இன்றைய தினம் வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில நாட்களாக பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பங்கேற்று வந்த நிலையில், இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் அரசியல் கட்சியினர் என பல நபர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக மக்களவை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0