ஐந்தே நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வீசி சென்றதால் பரபரப்பு. காவல்துறையினர் மீட்டு அரசுமருத்துவமனையில் அனுமதி

11 November 2020, 10:14 pm
Quick Share

செங்கல்பட்டு: மதுராந்தகம் பகுதியில் ஐந்தே நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வீசி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செங்குந்தர் பேட்டை என்ற இடத்தில் இடுகாட்டில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கல்மனம் கொண்ட தாய் வீசி சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இடுகாட்டில் விடப்பட்டிருந்த பச்சிளம் பெண் குழந்தையை மதுராந்தகம் காவல் துறையினர் கைப்பற்றினர். குழந்தை மிகவும் சோர்வாக காணப்பட்டதால் குழந்தையை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை முடிந்த பிறகு குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறையில் வைத்து கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0