சுதந்திர தினவிழாவில் தகைசால் தமிழர் விருது அளித்த முதலமைச்சருக்கு ஷாக் கொடுத்த நல்லகண்ணு : கைத்தட்டி வாழ்த்து கூறிய பார்வையாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 11:05 am
NallaKannu CM - Updatenews360
Quick Share

இன்றைய தினத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, இன்று தகைசால் தமிழர் விருதை நல்லகண்ணுக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.

பின்னர் பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் தமிழக முதல்வர் நல்லகண்ணுக்கு வழங்கினார். இதனை ஏற்ற நல்லகண்ணு ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலாக 5 ஆயிரம் சேர்த்து தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இத்தகைய செயலால் தமிழக முதல்வர் சிறிது நேரம் அப்படியே உறைந்து நின்றார். பின்னர் இதனை ஏற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Views: - 124

0

0