புதுச்சேரியில் அரசு ஊழியர் வீட்டில் நடராஜர், அம்பாள் சிலைகள் மீட்பு : தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை!!

22 July 2021, 11:32 am
Statue Seized -Updatenews360
Quick Share

புதுச்சேரி : அரசு ஊழியர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்றரை அடி உயரமுள்ள நடராஜர், அம்பாள் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுச்சேரியில் முத்தயால்பேட்டையில் வசித்து வரும் அரசு ஊழியரான சுரேஷ் என்பவரது வீட்டில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து டிஎஸ்பி கதிரேசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் புதுச்சேரிக்கு வந்து சுரேஷின் வீட்டில் புகுந்து மூன்றரை அடி உயரமுள்ள நடராஜர், அம்பாள் சிலைகளையும், ஒன்றரை அடி உயரமுள்ள மேலும் 2 சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் சிலைகளை எடுத்து செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் போலீசார் பொதுமக்களிடம் பேசி அவர்களை சமாதானம் செயதனர்.

பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு சிலை கடத்தில் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.எஸ்.பி. கதிரேசன், எங்களுக்கு வந்த ரகசிய தகவலின்படி புதுச்சேரியில் உள்ள சுரேஷ் வீட்டில் இருந்த சுவாமி சிலைகளை சந்தேகத்தின் பேரில் எடுத்து செல்வதாகவும், சிலைகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் பரிசோதனை செய்யப்படும் என்று கூறிய அவர், சிலை ஐம்பொன் சிலையாக இருந்தால்தான் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Views: - 194

0

0