கண்களின் கருவிழிகளில் தேசியக் கொடி.. புகைப்பட கலைஞர் எடுத்த போட்டோஸ் வைரல்..!

Author: Vignesh
12 August 2024, 1:03 pm

வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் – கண்களின் கரு விழிகளில் தேசிய கொடியை – புகைப்படம் எடுக்க வேண்டுமென்று எண்ணி வித்தியாசமான முறையில் தொலைபேசி கேமராவில் புகைப்பட கலைஞரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்.

கணினி டெஸ்க்டாப் இல் தேசிய கொடியின் புகைப்படம் டவுன்லோட் செய்து பின்பு – அந்த புகைப்படத்தை மிகவும் பெரியதாக தெரியும் படி வைத்துகொள்ள வேண்டும்.பின்பு அந்த டெஸ்க்டாப் மிக மிக அருகில் ஒரு நபரை உட்கார வைத்து அவர் கண்களை திறக்க சொல்லி கணினி டெஸ்க்டாப்பில் உள்ள தேசிய கொடியை உற்று பார்க்க சொல்ல அந்த தேசிய கொடியின் புகைப்படம் கண்களின் கரு விழிகளில் மிக அழகாக வெளிப்படும் பொழுது தொலைபேசி மேக்ரோ லென்ஸ் எனப்படும் மொபைல் லென்ஸ் பயன்படுத்தி கோவையை சேர்ந்த “தொலைபேசி புகைப்பட கலைஞர் பாலச்சந்தர்” எடுத்த புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கண்களின் கரு விழிகளில் தேசிய கொடியை – புகைப்படம் எடுக்க வேண்டுமென்று எண்ணி வித்தியாசமான முறையில் தொலைபேசி கேமராவில் புகைப்பட கலைஞர் பாலச்சந்தர் இப் புகைப்படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!