தேசிய அளவிலான யோகா, சிலம்ப போட்டிகள்: 24 தங்கப் பதக்கங்களை வென்ற கோவை வீரர்கள்…!!
Author: Aarthi Sivakumar28 October 2021, 5:44 pm
கோவை: தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் 24 தங்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.
தேசிய அளவிலான ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ், டோர்ணமென்ட் போட்டிகள் யூத் நேசனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் கோவா பகுதியில் உள்ள கலிங்கூட் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி முதல் 24 ம் தேதி நடைபெற்றது.
இதில் சிலம்பம், யோகா, கபடி, வாலிபால், கராத்தே, டேக்வாண்டோ, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப், ஹரியாணா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள கோவை மாவட்டத்தில் இருந்து சூலூர் அடுத்த காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள லெமன் ஸ்போர்ட்ஸ் ரெளத்திரா அகாடமி சார்பில் 14 வயது முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் சுமார் 34 பேர் கலந்து கொண்டனர்.
இந்த சிலம்ப போட்டிகளில் 15 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் வென்றனர். மேலும் யோகா போட்டிகளில் கலந்து கொண்ட கோவை மாணவர்கள் 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றனர். பரிசுகளையும், பதக்கங்களையும் வென்ற மாணவர்கள் நேற்று கோவை சூலூர் அடுத்த காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள பயிற்சி மையத்திற்கு வந்தடைந்தனர்.
அவர்களுக்கு சூலூர் பகுதி பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்து 24 பதக்கங்களை பெற்று வந்தமைக்காக பாராட்டுக்களை தெரிவித்தனர்.
0
0