இயற்கை விவசாய பண்ணை ஊழியர் மின்சாரம் தாக்கி பலி.!!

29 August 2020, 1:55 pm
Quick Share

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த புத்தாகரம் இயற்கை விவசாய பண்ணை ஊழியர் மின்சாரம் தாக்கி பலி .. வாலாஜாபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் பகுதியில் சென்னையை சேர்ந்த தேவதாஸ் என்பவர் 40 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாய பண்ணை நடத்தி வருகிறார். இப் பண்ணையில் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பண்ணைக்கு பணி காரணமாக சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சக ஊழியர்கள் வாலிபர் மரணம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வாலாஜாபாத் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த வாலிபர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.