ரகசிய திருமணம் செய்து கொண்டார்களா நயன்தாரா–விக்னேஷ் சிவன் ஜோடி.? புகைப்படங்கள் வைரல்.

Author: Rajesh
28 April 2022, 10:39 am
Quick Share

திரைப்பிரபலங்கள் ஜோடியாக சுற்றுவதும் பின்ன ஓரிரு மாதங்கள் அல்லது வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்த பின்னர், சிலர் சரிவராது என பிரிந்து விடுகின்றனர். அதிலும், சிலர் திருமணம் செய்துகொண்டு ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் தங்களது மண வாழ்க்கையை முடித்துக் கொண்ட பிரபலங்களும் இருக்கின்றனர்.

அப்படி இருப்பவர்கள் மத்தியில், நீண்ட வருடங்களாக தங்களை காதலர்களாக அறிவித்து கொண்டு, காதல் பறவைகளாக தமிழ் திரையுலகில் உலா வருகின்றனர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா.
இவர்கள் ‘நானும் ரவுடி தான்’ எனும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடிக்கும் போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் பிறகு, இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துருக்கின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென சென்ற விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனால், இருவருக்கும் அங்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பி விட்டுள்ளனர். ஆனால், விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெற்றிப் பெறுவதற்காகவே சாமி தரிசனம் செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் கூறுகிறது. கடந்த சில நாட்களாகவே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கோவில் கோவிலாக சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 1303

0

0