அந்த இடத்தில் புது டாட்டூ போட்ட நயன்தாரா… விக்னேஷ் சிவனால் அம்பலமான ரகசியம்.. டாட்டூவின் அர்த்தம் என்ன தெரியுமா..?

Author: Babu Lakshmanan
20 August 2022, 1:56 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது , Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

கடந்த 7 ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நயன்தாரா, இந்த ஆண்டுதான் திருமண பந்தத்திற்குள் அடியெடுத்து வைத்தார். திருமணம் முடிந்ததும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற புதுஜோடி, தற்போது பார்சிலோனாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அங்கு இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஸ்பெயினில் பொதுஇடத்தில் இந்தியக் கொடியை வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டது பெரும் வரவேற்பை பெற்றது.

பொதுவாகவே, நடிகை நயன்தாரா டாட்டூ மீது பிரியம் கொண்டவராவார். அவர் பிரபுதேவாவை காதலித்த போது, இடதுகையில் ‘Pரபு’ என பச்சை குத்திக் கொண்டார். பின்னர் அவரை பிரிந்த பிறகு அதை அப்படியே பாசிட்டிவிட்டி (Positivity) என மாற்றிக் கொண்டார். இது ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தனது உடம்பில் மேலும் ஒரு இடத்தில் புதிய டாட்டூவை நயன்தாரா போட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் வீடியோவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் வெளியிட்டதன் மூலம் அந்த டாட்டூ விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது.

நயன்தாரா அந்த டாட்டூவை தனது பின் கழுத்தில் போட்டுள்ளார். அதில் என்ன வாசகம் எழுதியிருக்கிறது என்பது சரியாக தெரியாவிட்டாலும், இதுபோன்று கழுத்தில் டாட்டூ போடுவது மிகவும் கஷ்டமான விஷயம் என்றும், அப்படி போடுபவர்கள் மிகவும் சவாலான மற்றும் துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடியவர் என்று அர்த்தமுடையது என்கின்றனர் டாட்டூ பிரியர்கள்.

Views: - 215

0

0