திருமண புகைப்படத்தை வெளியிடும் விக்னேஷ் சிவன்.. கடும் அப்செட்டில் நயன்தாரா..? என்ன காரணமா இருக்கும்.?

Author: Rajesh
11 July 2022, 3:46 pm
Quick Share

நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜுன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, இதையடுத்து கேரளாவுக்கு சென்று அங்கு நயன்தாராவின் பெற்றோரிடம் ஆசிபெற்றனர்.

அவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு ஜோடியாக ஹனிமூன் சென்றனர் .பின்னர் தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் விக்கி. அந்த வகையில் திருமணத்தில் எடுத்த கலந்து கொண்ட ரஜினி,ஷாருகான் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், பொத்தி பொத்தி வைத்திருந்த புகைப்படத்தை கடந்த இருநாட்களாக விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். இது குறித்த சில காரணங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது நயன்தாரா தனது திருமணத்தை வைத்து பக்கா பிசினஸ் பிளான் போட்டு இருந்தார். ஆனால், தற்போது அந்த நிறுவனம் தொகை அதிகமாக இருப்பதாக கூறி பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அப்செட்டான நயன்தாரா, ஒவ்வொரு போட்டோக்களையும் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இனி நடிகையின் திருமண வீடியோவை பார்க்கும் ஆர்வமும் ரசிகர்களிடம் குறைத்துவிட்டது என்பது போலவே தெரிகிறது.

Views: - 262

5

5