கூடுதல் படுக்கை வசதிகள்… கண்காணிக்கக் குழு : எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை எம்எல்ஏக்கள் கோரிக்கை…!!!

15 May 2021, 5:44 pm
SP Velumani - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நிலவி வரும் படுக்கை, ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையினால் உயிர்பலியும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. மேலும், வடமாநிலங்களில் நிலவியதை போன்று, தகனம் செய்வதற்காக உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவையில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. மா. சுப்ரமணியன், திரு.சக்கரபாணி, திரு.க.ராமச்சந்திரன் ஆகியோரை கோவை மாவட்ட கழகம் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கோரிக்கை மனுவை வழங்கினோம்.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மக்களை காக்க மாநகராட்சி நிர்வாகத்தை போர்க்கால அடிப்படையில் இயங்கச் செய்து, உயிர் காக்கும் மருந்துகள், ஆக்சிஜன், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி அவற்றை கண்காணிக்க குழுக்கள் அமைத்து மக்களை நோய்த்தொற்றிலிருந்து முழுவதுமாக பாதுகாக்க உரிய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு அமைச்சர்களிடம் வலியுறுத்தினோம்,” என தெரிவித்தார்.

Views: - 201

0

0