‘கைலாசா‘ நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள் : 90ஸ் கிட்ஸ் நித்திக்கு கடிதம்!!

15 September 2020, 3:44 pm
Nithi 90s Kids- updatenews360
Quick Share

திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 90ஸ் கிட்ஸ் பிறந்தவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தேடப்படும் குற்றவாளிகளில் உள்ள பிரபல சாமியார் நித்யானந்தா, கைலாசா என்ற நாட்டில் உள்ளதாகவும், கைலாசா நாட்டிற்காக தனியாக நாணயம் வெளியிடுவதாக கடந்த விநாயகர் சதுர்த்தியன்று நாணயத்தை வெளியிட்டார்.

இந்தநிலையில் கைலாசா நாட்டில் உணவகம் திறக்க அனுமதி வேண்டி மதுரையில் இருந்து பிரபல உணவகத்தின் உரிமையாளர் கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் கடிதத்திற்கும் சளைக்காமல் சமூக வலைதளங்களில் மூலம் நித்யானந்தா பதிலும் அளித்து வருகிறார்.

இந்த நிலையில் கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு 90ஸ் கிட்ஸ அனுப்பிய கடிதம் ஒன்று வைரலாகி வரகிறது. அந்த கடிதத்தில் அனுப்புதல் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுதல் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

90ஸ் வருடத்தில் பிறந்த எங்களுக்கு பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம். அதனால் தங்கள் ஆசிரம்த்தில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொடுத்து கைலாசா நாட்டில் தங்கம் வசதியுடன் ஒரு அரசாங்க வேலை கொடுத்து மனக்கவலையை தீர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே கைலாசா நாட்டிற்கு பல கோரிக்கை கடிதங்கள் அனுப்பபட்டு, அதற்கு பதிலை தெரிவித்து வரும் நித்யானந்தா, 90ஸ் கிட்ஸ் வயிற்றில் பாலை வார்ப்பாரா அல்லது 90ஸ் கிட்ஸ் சாபத்தை வாங்குவாரா என்பது பொறுத்திருந்துதான் தெரியவரும்.

Views: - 13

0

0