தொற்றே இல்லாத கைலாசாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தேவை : நித்திக்கு கடிதம்!!

2 September 2020, 10:07 am
Nithyananadha - Updatenews360
Quick Share

கைலாசா என்ற நாட்டை அறிவித்து நித்தியானந்தா ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கியபாடில்லை. ஒரு பக்கம் கைலாசா நாட்டிற்கான தனி நாணயங்களை அறிவித்து பரபரப்பை கிளப்பினார். எப்போது அந்த அறிவிப்பு வந்ததோ அப்போது முதல் பல்வேறு தரப்பினர் பல கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

கைலாசாவில் உணவகம் அமைக்க அனுமதி வேண்டும் எனமதுரையில் உள்ள பிரபல உணவக நிறுவனம் கோரிக்கை வைத்தது, அதே போல விவசாயம் செய்ய வேண்டும், துணிக் கடை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பு கோரிக்கைகளை வலுத்து வருகிறது.

ஆனால் நேற்று புதியதாக கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வேண்டும் என தமிழரின் வீர மரபு என்னும் அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து கோரிக்கைகளுக்கும் பதில் அளித்த நித்தியானந்தா, இதற்கும் பதிலளிப்பார் என்று ஆர்வத்தில் அந்த அமைப்பு காத்திருக்கிறது.

கொரோனா தொற்றால் கோவில் விழா, வீர விளையாட்டுக்களை நடத்துவது அரிதான காரியம் என்பதால் தொற்றே இல்லாமல் உள்ள கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Views: - 0

0

0