மாநாடு படத்தை BAN செய்யணும்.. இல்லைனா சிம்பு வீட்டு முன் போராட்டம் வெடிக்கும் : வேலூர் இப்ராஹிம் WARNING!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2021, 5:19 pm
Need To Ban Maanaadu - Updatenews360
Quick Share

மதுரை : மாநாடு படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், படத்தை தடை செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2 நாட்கள் முன்பு சிம்பு நடிக்கும் மாநாடு சினிமாவில் நான் பார்த்தேன். அந்த படத்தில் காவல்துறையினரை தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

கோவை குண்டு வெடிப்பு குறித்து மாநாடு படத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது. இந்து – முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக மாநாடு படம் அமைந்துள்ளது. மத அடையாளங்கள் படத்தில் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளது. மாநாடு பட விவகாரத்தில் முதல்வர் தலையீடு செய்ய வேண்டும். சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும், காவல்துறையை கொச்சைப்பசுத்தும் விதமாக மாநாடு படம் அமைந்துள்ளது, மாநாடு படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், படத்தை தடை செய்யவில்லை என்றால் பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்படும்.

மாநாடு படத்தின் இயக்குனர், நடிகர் வீடு முன் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்த வேலூர் இப்ராஹிம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டு உள்ளது, முதல்வர் கையில் உள்ள காவல்துறை செயல்படாமல் உள்ளது.

பாஜக புகாரில் காவல்துறை நடவடிக்கைகள் எடுப்பதில்லை. தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நகர்புற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். பொய் பிரச்சாரம் மூலம் திமுக ஆட்சி பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 318

0

0