பொம்மைக்கு மலர் மாலை : மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் : ‘ஒவர்’ பகுத்தறிவில் உடன் பிறப்புகள்

8 September 2020, 12:16 pm
Cbe DMK - updatenews360
Quick Share

கோவை : பொம்மை ஒன்றுக்கு மலர் மாலை சூட்டி மரியாதை செய்து, மருத்துவ உபகரணங்களுக்கு மலை மாலை சூட்டி தங்களது பகுத்தறிவை திமுக தொண்டர்கள் காட்டியுள்ளனர் .

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தேர்வு வேண்டாம் என்றும், ரத்து செய்யக்கோரியும் கடந்த ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதே தமிழக அரசின் முடிவு என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த சூழலில் தான் ,கொரோனா அச்சுறுத்தல் காலத்தில், மாநில அரசின் பணிகளை குற்றம் சுமத்தமுடியாத எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு ரத்து என்ற போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் பெருவாரியான மக்களின் கோரிக்கையாக இருந்தாலும், தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக்கொள்ளும் திமுக.,வினர் கோவையில் செய்த காரியம் நகைப்பை ஊட்டியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை கோட்டை மேடு பகுதியில் திமுக இளைஞரணி கோவை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் கும்பலாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், துணிக்கடையில் நிறுத்தப்பட்டிருக்கும் பொம்மை ஒன்று வாங்கி வந்து, அதற்கு மாலை சூடி, அந்த பொம்மையை சூழ்ந்து நின்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர்.

மேலும், அந்த பொம்மையின் மீது மலர் தூவி மரியாதை செய்துவிட்டு, மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று கோரி புறாவின் கால்களில் ஒரு பேப்பரை சுற்றுவிட்டு, ஒன்..டூ…த்ரீ.. என்று கூறி பந்தயத்திற்கு விடுவது போல் புறாவை பறக்கவும் விட்டனர். அந்த புறா மத்திய அமைச்சகத்திற்கு செல்கிறதாம்.!

மருத்துவப்பணிக்கு சற்றும் தொடர்பில்லாத இந்த தொண்டர்கள் மருத்துவர் அணியும் கோர்ட்டை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை கண்ட பொதுமக்கள்
என்ன தான் ஆர்ப்பாட்டம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று புலம்பியபடியே சென்றனர்.

Views: - 7

0

0