நீட் ரத்தாக போகுது, காவிரி நீர் வரப்போகுது : கொஞ்சம் பொறுமையா இருங்க… சபாநாயகர் அப்பாவு கூல்!!!
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா நாட்டுக்காக உழைத்தவர். சுதந்திர போராட்ட காலத்தில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மதுரை பல்கலைகழகத்தில் ஆட்சி மன்றக்குழு ஒப்புதலோடு பட்டமளிக்க இருந்த நிலையில் அதை சவார்க்கர் வழிவந்தவர்கள் மறுக்கின்றார்கள். அவருக்கு பட்டம் கொடுத்தால் கவர்னருக்கு பெருமை சேர்ந்திருக்கும். எதனால் கொடுக்கவில்லை என்பதற்கான காரணம் புரியவில்லை.
எதிர்கட்சி தலைவரது இருக்கை குறித்து எந்தவித சர்ச்சை கருத்தும் இல்லை. கடந்த சட்டசபை கூட்ட நிறைவு நாளில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது.
சட்டசபை முன்வரிசையில் கட்சி தலைவர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு தரப்பட வேண்டிய மரியாதைகள் குறித்தும் தெளிவாக தெரிவித்தாகி விட்டது. இருக்கை விவகாரத்தில் யாரும் குரல் எழுப்பக்கூடாது . அது எனது தனிப்பட்ட விருப்பம் என முந்தைய சபாநாயகர் தனபால் தெரிவித்திருக்கிறார்.
தேமுதிக பிரேமலதாவால் படிக்க முடியாது என்பதால் 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை ஒழிக்க முடியாது என சொல்லியிருக்கலாம். அவங்க இனிமே படித்து டாக்டராக வர முடியாது. நீட் அவர்களுக்கானதல்ல. வருங்கால மாணவ மாணவியர்களுக்கானது. கருணாநிதி ஆட்சி காலத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் நடந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிதாக ஒரு கல்விக்கொள்கையை அறிவித்து மீண்டும் தேர்வு வைக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இதில் தமிழக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சிறுகுறு நடுத்தர தொழில் நடத்துவோருக்கு பீக் அவரில் ஈபி கனைக்ஷன் தொகையை கூடுதலாக வசூலிக்கும் நடைமுறையை நாம் கொண்டுவரவில்லை. சென்ரல் எனர்ஜி டிபார்ட்மெண்ட் கூடுதல் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. அதனால் இதில் நம்மால் தலையிட வழியல்லை.
இந்தியா 67 வருடத்தில் வாங்கிய கடன் 55 லட்சம் கோடி. மோடி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டு காலத்தில் வாங்கப்பட்டுள்ள கடன் 140 லட்சம் கோடி கடன் மட்டும் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த அனைவரின் மீதும் கடன்சுமை ஏறியுள்ளது. குஜராத்தை சேர்ந்த 80 முதலாளிகளுக்கு ரூ. 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் நிதியாக பல ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளனர்.
இன்றைக்கு காஸ் ,பெட்ரோல் பொருட்களை கையாளும் சமூகத்தினர் 95 சதவீதம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் எனவும் சொல்கின்றனர். அவர்கள் தான் கடன் கொடுத்து கடனை ரத்து செய்கின்றனர்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுக்கெடுக்க வேண்டும். திருவாரூர் பல்கலைகழகத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பல்கலைகழகத்திற்கு ரூ. 11 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. கர்நாடகவிலிருந்து தண்ணீரை திறந்துவிட பாஜ தவிர அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி கொண்டுள்ளன. டெல்டாவில் பணப்பயிர் பயிரிட முடியுமா என கலெக்டரிடம் ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.