கிறிஸ்துவ பாதிரியாருக்கு வலுக்கும் எதிர்ப்பு : நெல்லையில் உருவபொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
23 July 2021, 10:49 am
george ponnaiah - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அரசியல் தலைவர்களை அவதூறாகவும், மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசிய கிறிஸ்துவ பாதிரியாரின் உருவபொம்மை பாஜகவினர் எரிக்க முயன்ற சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் பேசினார். அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்ததுடன், திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்றும் அவர் கூறினார்.

அதோடு, பாரத மாதாவை அவமதித்து பேசியதோடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி, மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசினார். அவர் பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்க முயன்றதாக அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்த நிலையில், நெல்லையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரது உருவபொம்மையை எரிக்க முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 202

0

0