கோலம் போட சென்ற பெண்ணின் செயின் பறிப்பு.! அரிவாளை காட்டி மிரட்டிய சிசிடிவி காட்சி.!!
2 August 2020, 7:46 pmநெல்லை : பேட்டை அருகே நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள காந்தி நகரில் வசித்து வருபவர் சண்முகநாதன். இவரது மனைவி செல்வரத்தினம் (வயது 57).
இன்று காலை கோலம் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வீதியில் வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவர் மட்டும் இறங்கி, செல்வரத்தினம் அணிந்திருந்த 9 சவரன் நகையை பறிக்க முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட பெண், தனது செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையே போராட்டம் நடந்தது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த செல்வரத்தினத்தின் மகனை பார்த்த் திருடன் ஓட்டம் பிடித்தான்.
இதையடுத்து அந்த திருடன் இருசக்கர வாகனத்தில் ஏற முற்பட்ட போது, பின்னே துரத்தி வந்தவரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளான். இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றன. இந்த காட்சி எதிர் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.