சளி புடிச்சா சானிய கரச்சு குளிங்க.. என்ன உருட்டு, உருட்டறீங்க : ஷர்மிகா சரணுக்கு எதிராக கொதித்த நெட்டிசன்கள்.. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2023, 1:26 pm
Daisy Saran Daughter - Updatenews360
Quick Share

பாஜக சிறுபான்மையின அணி தலைவரான டெய்சி சரணின் மகள் தான் ஷர்மிகா சரண். இவர் டெய்சி ஹாஸ்பிடல் என்ற ஓரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

ஒரு மருத்துவ குறிப்பு என்ற பெயரில் வரும் 100 ஆண்டுகளில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அறிய வகை மருத்துவத்தை அவருடைய பார்வையாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், முரட்டு வைத்தியம், மலையடி சாத்திரம், ஹோமியோ பதி, அம்பிகாபதி, அமராவதி என எல்லாவற்றிற்கும் வைத்தியம் பார்க்கும் இவரின் திறமைக்கு எல்லையே கிடையாது.

அவர் சொல்வதெல்லாம் சேர்த்து புத்தக அருங்கட்சியாகமே ஆரம்பிக்கலாம் அந்த அளவிற்கும் உருட்டாக உருட்டி வருகிறார். நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் சரிமாணமாகாது என்றும் அது மிருகத்தை DNAவிலே இருக்கிறது என்று மாட்டாய் சாப்பிட்டால் நம்முடைய உடலில் என்ன நடக்கும் என்று DNA வரை சென்று ஆராய்ச்சி செய்து வெளிநாட்டு மருத்துவர்க்ளுக்கே டஃப் கொடுத்திருக்கிறார் நம்ம டாக்டர்.

அதே போல 10 நாட்கள் பட்டினி இருந்து குறைக்கிற உடல் எடை 11 வது நாள் ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 ஜாமுன் எடை வந்துவிடும் என்று சூர்யாவை போல “ஓங்கி அடிச்ச ஒன்றை டன் வெய்ட்டுடா” என்று பேசியிருக்கிறார் நம்ம சித்த மருத்துவர் ஷர்மிகா.
அதிலும் இவங்க சொன்னதுல ஹைலைட் என்னவென்றால் குழந்தை பெத்துகொள்ள வேண்டுமென்றால் புருஷன் நல்லவனா இருந்தா போதும் என்றும் மற்ற வற்றை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் பேசியதை பாரத்தால் கடவுளுக்கே கோவம் வரும்.

இதென்ன பிரமாதம் இது விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்பதை போல சளி புடிச்சா சானியா கரச்சி குளிங்க, இருமல் வந்தா இஷ்ட தெய்வத்தை கும்பிடுங்க, வெள்ளை ஆகணுமா வெண்ணெயை சாப்பிடுங்க என்று ரத்தம், நாடி , நிரம்பி, சத, மூளைன்னு எல்லாவற்றிலும் உருட்டு ஊறிய ஒருவரால் மட்டுமே இவரை போல சொல்ல முடியும் என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இப்படி ஒரு டாக்டருக்கு சிலை வைத்து, ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறதுல என்ன தப்பு இருக்கு. ஒரு தடவ நம்ம டாக்டர் சொல்லும் போது ராணுவ வீரர்கள் மாதிரி டாக்டர்களும் நாட்டுக்காக சேவை செய்கிறோம் என்று சொல்லி பீல் பண்ணிருந்தாங்க நம்ம டாக்டர்.

சொல்லி அது உண்மையான டாக்டருக்கு மட்டும்தான் இவங்க டாக்டர் கிடையாது அதை விட அஷ்டமா சித்திகளை உள்அடக்கிய ஒரு மகான். போதி தர்மருக்கே மருத்துவம் சொல்லி கொடுத்த இவங்க கிட்ட எந்த காய், கனி என்ன பலன் என்று கேட்டால் டக்குனு சொல்லுவாங்க, ஆனால் எனக்கு பிரச்னை எதாவது மருந்து கொடுங்கன்னு மட்டும் அவங்க கிட்ட போய் நிக்காதிங்க போன அப்படியே போக வேண்டியதுதா.

தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், ஷர்மிகா சொல்வதில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள இது போல் பேசுகிறார். ஒரு மருத்துவர் மருத்துவ ரீதியான கருத்துகளை மட்டுமே மக்களிடையே சொல்ல வேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு சொல்லக் கூடாது. குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்கிறார். இதற்கு மருத்துவ ரீதியில் எந்த ஆதாரமும் இல்லை.

மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக தவறான கருத்துகளை பேசும் ஷர்மிகா குறித்து பொதுமக்கள் யாராவது புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் தவறான தகவல்களை நம்பி சுய மருத்துவம் செய்து கொள்வது கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவர்களை நாட வேண்டும். தமிழகத்தில் 1541 இந்திய மருத்துவ மையங்கள் உள்ளன. அங்குச் சென்று இலவசமான ஆலோசனைகளையும் முறையான சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

Views: - 536

0

0